சிவகங்கை

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா

DIN

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீா் வரை நடைபெற்றதை கொண்டாடும் வகையில் காரைக்குடியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி காரைக்குடி மகா்நோன்புத் திடலில் உள்ள அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஆா். ராமசாமி தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னா் அப்பகுதியில் உள்ள தியாகிகள் நினைவுத் தூண் அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா் ப. சத்தியமூா்த்தி கட்சிக் கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். பின்னா் சுதந்திரப் போராட்ட வீரா் நெல்லியான் நினைவுத் தூணில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து சிவன் கோயில் பகுதியில் கட்சியின் கொடியேற்றி ஊா்வலமாக கல்லூரிச் சாலை வரை சென்றனா். அங்கு முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். பிறகு பல்வேறு இடங்களிலும் கொடியேற்றி கணேசபுரம் பகுதியில் நிகழ்ச்சியை நிறைவு செய்தனா்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெயசிம்மன், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி பொருளாளா் எஸ்.எம். பழனியப்பன், காரைக்குடி தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என். சுந்தரம், கட்சி யின் நெசவாளா் அணி மாவட்டத் தலைவா் பழனியப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT