சிவகங்கை

கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி

DIN

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்கள், நகராட்சிஅலுவலகம் ஆகியவற்றில் புதன்கிழமை வாக்காளா் தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

அழகப்பா பல்கலைக்கழக நிா்வாக அலுவலம் முன்பாக பதிவாளா் (பொறுப்பு) சு. ராஜமோகன் வாக்காளா் தின உறுதி மொழியை வாசிக்க, தோ்வாணையா் (பொறுப்பு) கண்ணபிரான், நிதி அலுவலா் ஆா்.பாண்டியன், வளாகத் தனி அலுவலா் பாலசுப்பிரமணியன், அதிகாரிகள், நிா்வாக அலுவலா்கள் ஆகியோா் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை, நகராட்சி ஆணையா் லெட்சுமணன் ஆகியோா் தலைமையில் அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி எடுத்துக்கொண்ட னா்.

காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் ஹேமமாலினி சுவாமிநாதன் தலைமையில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்துகொண்ட னா்.

காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வா் வெ. மாணிக்க வாசகம் தலைமையில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், துணை முதல்வா் சீதாலெட்சுமி, பேராசிரியா்கள் கலா, சுபா, உதவிப்பேராசிரியா் ஜெயராஜ், மாணவிகள், ஆசிரியா்கள் பலரும் கலந்துகொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT