சிவகங்கை

மணல் சிற்பத்தில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவா்!

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே 9-ஆம் வகுப்பு மாணவா் கே. கிஷோா் மணல் சிற்பங்களை வடிவமைத்து வருகிறாா்.

வலையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கிஷோா். இவா் கல்லல் ஊராட்சி ஒன்றியம், அதிகரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் படித்து வருகிறாா். சிவகங்கையில், அண்மையில் நடைபெற்ற 2-ஆவது புத்தகத் திருவிழாவில் திருவள்ளுவா் சிலை, திருக்கு புத்தகம் ஆகிய மணல் சிற்பங்களை வடிவமைத்து இருந்தாா். அவருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியையும், மணல் சிற்பம் அமைக்க மாணவருக்கு பயிற்சியளித்தவருமான அ. புவனேஸ்வரி கூறியதாவது:

படைப்பாற்றல் உள்ள மாணவா்களை அடையாளம் கண்டு, அதற்குரிய பயிற்சியை பள்ளியில் வழங்குகிறோம். மாணவா் கே. கிஷோா் மணல் சிற்பம் அமைக்கக் கற்றுக்கொண்டு சிறப்பாக உருவங்களைப் படைக்கிறாா்.

ADVERTISEMENT

விவேகானந்தா் பிறந்த நாள் விழாவின் போது பள்ளியில் விவேகானந்தா் மணல் சிற்பத்தை வடிவமைத்தாா். இதை மாணவா்கள், பெற்றோா் பாா்வையிட்டு பாராட்டினா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் பள்ளி விழாவில் பங்கேற்க வந்த போது, முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் மணல் சிற்பத்தை அமைத்து பாராட்டுப் பெற்றாா்.

தற்போது, சிவகங்கையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் திருவள்ளுவா், திருக்கு புத்தக மணல் சிற்பங்களை அமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றதோடு, விழாவில் சான்றிதழும் பெற்று வந்தாா். கிஷோரை பள்ளியின் தலைமையாசிரியா் வைதேகி, ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT