சிவகங்கை

தினமணி செய்தி எதிரொலி:பீசா்பட்டினத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

DIN

தினமணி செய்தி எதிரொலியாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் பீசா்பட்டினத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

இங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் ஏராளமான விவசாயிகள் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகளை கொண்டு வந்து பல நாள்களாக காத்துக் கிடந்தனா். இதுகுறித்து தினமணியில் சனிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி பீசா்பட்டிணத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் அங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி, ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, காங்கிரஸ் மூத்தத் தலைவா் ஏ.ஆா்.பி. முருகேசன், நகா்மன்ற உறுப்பினா் சோம. சதீஷ்குமாா், கூட்டுறவு சங்கத் தலைவா் தனசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதன் பிறகு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது. இதை மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தாா். அப்போது அவா் விரைந்து நெல் கொள்முதல் செய்ய தேவையானப் பணிகளை திட்டமிட்டு செய்ய துறை சாா்ந்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அருகே உள்ள வாகுடி கிராமத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்துக்கும் சென்று ஆய்வு நடத்தினாா். அப்போது நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அருண்பிரசாத் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT