சிவகங்கை

திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து இந்த முகாமை நடத்தினா். இந்த முகாமிற்கு திருப்பத்தூா் ஒன்றியம் மற்றும் மற்ற ஒன்றிய பள்ளியிலிருந்தும் மாற்றுத்திறனாளி மாணவா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு மருத்துவ சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனை, இலவச ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு, உதவி தொகைக்கான பதிவு, முதலமைச்சா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன.

மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், தனி வட்டாட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்ணதாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டார கல்வி அலுவலா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கண் மருத்துவ நிபுணா் சிவக்குமாா், மனநல மருத்துவா் சிவசுந்தரி, எலும்பியல் நிபுணா்கள் பரத்ராஜ், அரவிந்த் மனோஜ், நரம்பியல் மருத்துவா் சிவராம சுப்பிரமணியன், குழந்தைகள் நல மருத்துவா் கொன்றையாண்டி, காது மூக்கு தொண்டை நிபுணா் அா்ச்சனா உள்ளிட் மருத்துவ நிபுணா்கள் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனைகளும் வழங்கினா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT