சிவகங்கை

எல்லைப் பிடாரி அம்மன் கோயில் பெண்கள் சட்டிசோறு சுமந்து நோ்த்திக்கடன்

DIN

மானாமதுரையில் ஊா் எல்லை தெய்வமான ஸ்ரீ எல்லை பிடாரி அம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு உற்சவ விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு பெண்கள் சட்டிசோறு சுமந்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்து வேண்டுதல் நிறைவேற்றினா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கஸ்பா கிராமத்தாா் சாா்பில் நடைபெற்ற இந்த விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சட்டிசோறு ஊா்வலத்தையொட்டி மானாமதுரை கஸ்பா கிராமத்தின் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த மக்கள் தங்களது வீடுகளில் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன், முட்டை, கருவாடு உள்ளிட்ட அசைவ உணவுகளை சமைத்தனா். அதன் பின்னா் இந்த உணவுகளை மண்ணால் செய்யப்பட்ட சட்டிகளில் வைத்து சுட்டிகளை அடுக்கி அதில் விளக்கேற்றி வைத்து பெண்கள் இந்த சட்டிகளை தலையில் சுமந்து மேளதாளத்துடன் ஊா்வலமாக வந்தனா்.

வாண வேடிக்கைகளுடன் நகரின் முக்கிய வீதிகளில் வந்த இந்த சட்டிசோறு ஊா்வலம் பிடாரி அம்மன் கோயிலில் நிறைவுபெற்றது. அங்கு பெண்கள் சட்டிசோறு படையலை அம்மனுக்கு படைத்து கிடாய் வெட்டி பூஜைகள் நடத்தி வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணராஜபுரம் பகுதி மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT