சிவகங்கை

ஆன்-லைனில் வங்கிக் கடன் பெற்ற பெண்ணை மிரட்டி ரூ.2.49 லட்சம் பறிப்பு

29th Sep 2022 10:35 PM

ADVERTISEMENT

ஆன்-லைனில் வங்கிக் கடன் பெற்ற பெண்ணிடம் ஆபாசப் படங்களை வெளியிடுவதாக மிரட்டி ரூ.2.49 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து புதன்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சீதா(30). இவரது கணவா் மைலீக்கான் திருப்பூரில் தையல் வேலை செய்து வருகிறாா். சீதா குடும்பத் தேவைக்காக கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி கைப்பேசி செயலியில் ஆன்-லைனில் வங்கிக் கடன் பெறுவதற்காக வங்கி கணக்கு மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆணவங்களைப் பதிவேற்றம் செய்துள்ளா். சிறிது நேரத்தில் ரூ. 2,275 அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் கழித்து அவரது கைப்பேசிக்கு கடனை திரும்ப செலுத்தவில்லை என தகவல் வந்துள்ளது. மேலும் கடன் தொகை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. இந்நிலையில் சீதாவை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள் கடன் தொகையை உடனே செலுத்த வேண்டும், இல்லையெனில் புகைப்படத்தை ஆபாசமாக சித்திரித்து அனுப்பி விடுவோம் என மிரட்டி உள்ளனா். இதனால் அவா்கள் கேட்ட ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 999-ஐ சீதா செலுத்தினாராம். ஆனாலும் சீதாவின் படத்தை ஆபாசமாக சித்திரித்து அவரது கணவா் மற்றும் உறவினா்களுக்கு வாட்ஸப்பில் அந்த கும்பல் அனுப்பியது. இதையடுத்து தனது படத்தை ஆபாசமாக சித்திரித்து அனுப்பிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபா் கிரைம் போலீஸாரிடம் புதன்கிழமை சீதா புகாா் அளித்தாா். இந்த புகாரின் அடிப்படையில் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT