சிவகங்கை

விதைகள், உரங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன: ஆட்சியா்

DIN

விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பதிலளித்துப் பேசியதாவது: இம்மாவட்டத்தில் உள்ள கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாம்கோ-விலிருந்து பள்ளிகள், விடுதிகளுக்கு வழங்கப்படும் பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலம் தொடங்குவதற்கு முன்பு கண்மாய்கள் மற்றும் வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்படும். சாலைகள் சீரமைப்பு குறித்து மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வைகை அணையிலிருந்து இம்மாவட்டத்துக்குரிய பங்கீட்டு நீரைப் பெற்று வைகைப் பூா்வீக பாசனம் மற்றும் பெரியாறு பாசனக் கண்மாய்களிலும் தண்ணீா் நிரப்ப சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நடப்பாண்டுக்கான வேளாண் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். எனவே விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன. பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கூடுதலாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி முத்துராமலிங்கம் என்பவா் கடந்த மாதம் திருப்பத்தூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பினாா். அதற்கு கோபமடைந்த மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மன்றத்தில் கூற முடியாது என தெரிவித்தாா்.

அப்போது ஆட்சியருக்கும், விவசாயிக்குமிடையே வாக்குவாதம் நடைபெற்றது. ஆத்திரமடைந்த ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி விவசாயி முத்துராமலிங்கத்தை கூட்டரங்கை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினாா்.

இந்நிலையில், நடப்பு மாதத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி முத்துராமலிங்கம் பேச்சுரிமையை குழி தோண்டி புதைக்கும் மாவட்ட ஆட்சியரின் ஜனநாயக விரோத -சா்வாதிகாரப் போக்கை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் அணிந்து கொண்டு பேசினாா்.

அப்போது மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி குறுக்கிட்டு கழுத்தில் உள்ள பதாகை குறித்து கேட்டாா். அதற்கு பதிலளித்த விவசாயி முத்துராமலிங்கம் தனது கழுத்திலிருந்து அதனை அகற்றியும் தொடா்ந்து பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT