சிவகங்கை

திருப்பத்தூரில் மருதுபாண்டியா் நினைவிடத்தில் தென்மண்டல ஐ.ஜி. ஆய்வு

7th Oct 2022 11:16 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியா்கள் நினைவிடத்தில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா காா்க் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சுதந்திரப் போராட்ட வீரா்கள் மருதுபாண்டியா்களின் நினைவு தினம், ஆண்டுதோறும் அக்டோபா் 24-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு மருதுபாண்டியா்களின் 221-ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியா்கள் நினைவிடத்தில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா காா்க் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டாா். நிகழாண்டு, தீபாவளி பண்டிகையன்று மருது பாண்டியா்களின் நினைவு நாள் வருவதால் கூடுதல் பாதுகாப்பு அளிப்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், டிஐஜி மயில்வாகனன் ஆகியோரிடம் ஐ.ஜி. அஸ்ரா காா்க் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாபன், மருதுபாண்டியா் வாரிசுதாரா்கள் குழுத் தலைவா் ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT