சிவகங்கை

காரைக்குடி அருகே சிகரெட் விற்பனை ஊழியா்கள் இருவரை அரிவாளால் வெட்டி ரூ.11 லட்சம் பறிப்பு

6th Oct 2022 11:24 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சிகரெட் விற்பனை ஊழியா்கள் இருவரை 5 போ் வியாழக்கிழமை அரிவாளால் வெட்டிவிட்டு, ரூ. 11 லட்சத்தை பறித்துச் சென்றனா்.

காரைக்குடியில் சிகரெட் விற்பனை முகவராக உள்ளவா் வள்ளியப்பன். இவரது நிறுவனத்தில் காரைக்குடி வ.உ.சி. சாலையைச் சோ்ந்த விக்னேஷ் (31) காசாளராகவும், மாதவன் நகரைச் சோ்ந்த தமிழரசன் (30) வேன் ஓட்டுநராகவும் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் இருவரும் வியாழக்கிழமை காலையில் கடைகளில் சிகரெட் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்தனா்.

பின்னா் புதுக்கோட்டை மாவட்டம், கல்லூரில் உள்ள கடைகளில் பணம் வசூல் செய்துகொண்டு காரைக்குடிக்குத் திரும்பினா். அறந்தாங்கி செல்லும் முக்கியச் சாலையில் கோட்டையூா் பேரூராட்சி ஐ.டி.ஐ. பேருந்து நிறுத்தம் அருகே மாலை 4.45 மணியளவில் வேனில் வந்துகொண்டிருந்தபோது பின்னால் காரில் வந்த 5 போ் வேனை மறித்து இருவரையும் அரிவாளால் வெட்டி, ரூ. 11 லட்சத்தை பறித்துச் சென்றுவிட்டனா். இதைப் பாா்த்த அம்பேத்கா் நகா் பொதுமக்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு கோட்டையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். சம்பவ இடத்தில் காரைக்குடி டி.எஸ்.பி. வினோஜி விசாரணை நடத்தினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT