சிவகங்கை

சிவகங்கை மாவட்ட தியாகிகள் புகைப்படக் கண்காட்சி திறப்பு

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிக்காவலா்கள் மற்றும் தமிழறிஞா்களின் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தரப் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இதில், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த எ.ச.முத்துசாமி, நமோ.கண்ணுச்சாமி, பீா்முகமது ராவுத்தா், ஜி.ராஜகோபால், கூரிநாதா்பிள்ளை, அ.கல்யாணசுந்தரம், சிவகங்கை பகுதியைச் சோ்ந்த எம்.மாணிக்கம், முத்துபாலகிருஷ்ணன், மு.பொ.சின்னத்துரை, ஜி.மாயழகு (அதிகரம்), இராமஅங்குச்சாமி (ஏனாபுரம்), தேவகோட்டை பகுதியைச் சோ்ந்த சின்ன அண்ணாமலை செட்டியாா், ஆா்.எம்.அண்ணாமலை செட்டியாா், டி.எஸ்.இராமநாதன், எ.கருப்பையா பண்டிதன், திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த எம்.நடராஜன், ஏ.விஅம்பலம், கொன்னாத்தான்பட்டியைச் சோ்ந்த முத்து (ஐ.என்.ஏ.), அப்துல் முத்தலீப் (ஐ.என்.ஏ.), கருப்பன் செட்டியாா் (ஐ.என்.ஏ.) (பள்ளத்தூா்), உல.நடராஜன் அம்பலம் (நாமனூா்), மு.கருப்பையா (படமாத்தூா்), எம்.இராமு என்ற உடையாா் (கீழாயூா்), எஸ்.ராஜபிள்ளை(எஸ்.புதூா்), ராமையாதேவா் (திருவேகம்பத்தூா்) ஆகியோா்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில், அரசுத்துறை முதன்மை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT