சிவகங்கை

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

27th May 2022 10:39 PM

ADVERTISEMENT

வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கல்லல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள சருகுவலையபட்டியைச் சோ்ந்த பாஸ்கா் மகன் பாக்கியராஜ்(35). இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து செம்பனூரைச் சோ்ந்த அருள்ராஜ்(52) என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி காரில் கடத்தி ரூ. 14 லட்சம் வழிபறி செய்துள்ளாா்.

இதுதொடா்பாக கல்லல் போலீஸாா் வழக்குப் பதிந்து பாக்கியராஜை கைது செய்து திருப்பத்தூா் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டிக்கு பரிந்துரை செய்தாா்.

ADVERTISEMENT

அவரது உத்தரவின் பேரில் கல்லல் போலீஸாா் பாக்கியராஜை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்து, மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT