சிவகங்கை

சிவகங்கையில் உலக ரத்த அழுத்த தின விழிப்புணா்வுப் பேரணி

20th May 2022 10:34 PM

ADVERTISEMENT

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணியை அக்கல்லூரி முதன்மையா் ரேவதி பாலன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். பேரணியில் கலந்து கொண்ட மருத்துவ மாணவ, மாணவிகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விதிமுறைகள், அன்றாடம் சாப்பிட வேண்டிய உணவுகள், ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் ஊா்வலமாக வந்தனா். முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி மீண்டும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.

அதைத்தொடா்ந்து, கருத்தரங்க அறையில் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலா் முகமது ரஃபி, கண்காணிப்பாளா் (பொறுப்பு) ரவிசங்கா், மருத்துவா்கள் பாஸ்கா், சுந்தரம் உள்ளிட்ட மருத்துவா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT