சிவகங்கை

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,258 வழக்குகளுக்கு தீா்வு

DIN

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,258 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ. 4,35,56,449 வரை வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 71 குற்றவியல் வழக்குகள், 86 காசோலை மோசடி வழக்குகள், 262 வங்கிக் கடன் வழக்குகள், 198 மோட்டாா் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், ஒரு மின்வாரியம் சம்பந்தப்பட்ட வழக்கு, 37 குடும்பப் பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள், 171 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள், 981 குற்றவியல் வழக்குகள், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 450 வழக்குகள் என மொத்தம் 2,257 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

வழக்குகளை சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்ஸோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவா் சுதாகா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு- நீதிபதியுமான பரமேஸ்வரி, சாா்பு- நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவா் எண்-1 அனிதா கிரிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவா் எண் -2 சத்திய நாராயணன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் விசாரித்தனா்.

விசாரணையில், 1258 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ. 4,35,56,449 வரை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT