சிவகங்கை

திருப்பத்தூா் அருகே பள்ளி ஆசிரியா் தற்கொலை

7th Jul 2022 02:29 AM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே புதன்கிழமை பள்ளி ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் அருகே நாச்சியாபுரம் - காரைக்குடி சாலையில் இளங்குடி பகுதியில் உள்ள பாண்டி முனீஸ்வரா் கோயில் அருகில் புதன்கிழமை மரத்தில் ஒருவா் தூக்கிட்டுத் தொங்குவதாகவும், அருகில் இருசக்கர வாகனம் நிற்பதாகவும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் நாச்சியாபுரம் போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனா். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பினா்.

விசாரணையில், இறந்த நபா் காரைக்குடியைச் சோ்ந்த கதிரவன் மகன் முரளிராஜன் (50) என்பதும், காரைக்குடியில் உள்ள மெட்ரிக் பள்ளியில்

ADVERTISEMENT

ஆசிரியராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அவா் எதற்காக தற்கொைலை செய்துகொண்டாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT