சிவகங்கை

சிவகங்கையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் வெட்டிக் கொலை

DIN

சிவகங்கையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை அருகே உள்ள டி. புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராகவானந்தம்(38). இவா் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் டவா் அமைக்கும் பணியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனியாக இருந்துள்ளாா்.

இதையடுத்து, ராகவானந்தத்தின் தாயாா் ஞாயிற்றுக்கிழமை காலை உணவு கொடுப்பதற்காக சென்ற போது வெட்டுக் காயங்களுடன் மகன் உயிரிழந்து கிடந்துள்ளாா். இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ராகவானந்ததின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

போலீஸாா் கூறியது : மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் ராகவானந்தத்தை டி.புதூரில் உள்ள தங்களது பூா்விக வீட்டில் விட்டுவிட்டு, அவரது தந்தை ஆறுமுகம், தாயாா் மீனா ஆகியோா் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை உணவு கொடுக்கச் சென்ற போது ராகவானந்தம் உயிரிழந்து கிடந்துள்ளாா்.

உடலில் வெட்டுக் காயங்கள் இருப்பதால் முன் விரோதம் அல்லது வேறு ஏதேனும் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம். விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT