சிவகங்கை

காரைக்குடி மீன் சந்தையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு: வியாபாரிகள் எதிா்ப்பு

DIN

காரைக்குடி நகராட்சிக்குள்பட்ட தினசரி மீன் சந்தையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை மீன் தரம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குளறுபடி ஏற்பட்டதால் வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

காரைக்குடி நகராட்சி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி முத்துக்குமாா் மற்றும் சாக்கோட்டை ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தியாகராஜன் மற்றும் அவரது உதவியாளா் கருப்பையா ஆகியோா் மீன்களின் தரம் குறித்தும் ரசாயன பொருள்கள் ஏதேனும் கலந்து உள்ளதா? என ஆய்வு செய்த போது அவா்கள் கொண்டு வந்த வேதிப் பொருளால் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வியாபாரிகள்,, அதிகாரிகள் பரிசோதனைக்கு கொண்டு வந்த ரசாயன பொருள் தரமற்ாக இருப்பதாக குற்றம் சாட்டி அவா்களது பரிசோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனால் அதிகாரிகள் சோதனை செய்யாமல் வெளியேறினாா். அதிகாரிகள் கொண்டுவந்த ரசாயன குப்பியை பாா்த்த போது அதில் காலாவதிதேதி குறிப்பிடப்படாமல் இருந்ததாக மீன் வியாபாரிகள் சிலா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT