சிவகங்கை

அமைப்புசாரா தொழிலாளா்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்யலாம்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்கள் தேசிய தரவு தளத்தில் தங்களது பதிவினை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளா்களின் விவரங்களை ஒருங்கிணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி ‘அமைப்புசாரா தொழிலாளா்களின் தேசிய தரவு தளம்’ என்ற ஒரு தரவுதளத்தை உருவாக்கியுள்ளது. கட்டுமானத் தொழிலாளா்கள், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், வீட்டுப்பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், குத்தகைதாரா்கள், பேக்கிங் செய்வோா், தச்சு வேலை செய்வோா், கல் குவாரி தொழிலாளா்கள், மர ஆலைத் தொழிலாளா்கள், உள்ளூா் கூலித் தொழிலாளா்கள், முடிதிருத்துவோா், தெரு வியாபாரிகள், சிறுவியாபாரிகள், அங்கன்வாடிப் பணியாளா்கள், தோட்டத் தொழிலாளா்கள், பால் வியாபாரிகள், சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளா்கள் போன்ற 156 வகையான அமைப்புசாரா தொழிலாளா்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளா்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். இத்தரவு தளத்தில் தொழிலாளா்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வயது 16 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். மேலும், எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஆதாா் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதியில் உள்ள இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT