சிவகங்கை

கல்லல், கானாடுகாத்தான் பகுதிகளில் நாளை மின்தடை

1st Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்குடி அருகே கல்லல் மற்றும் கானாடுகாத்தான் துணை மின்நிலையங்களில் உயரழுத்த மின்பாதையில் சனிக்கிழமை (ஜூலை 2) பணிகள் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கல்லல் துணை மின்நிலையத்தில் சாத்தரசன்பட்டி பீடரில் கல்லல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, அரண்மனை சிறுவயல், வெற்றியூா், சாத்தரசன்பட்டி ஆகிய பகுதிகளிலும், கானாடுகாத்தான் பீடரில் கானாடுகாத்தான், நேமத்தான் பட்டி, ஆத்தங்குடி, பலவான்குடி, ஓ. சிறுவயல், ஆவுடைப்பொய்கை, திருவேலன்குடி, நெற்புகப்பட்டி, சூரக்குடி ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று காரைக்குடி மின் கோட்ட செயற் பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT