சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தின விழா

DIN

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

காரைக்குடியில் உள்ள எம்.பி அலுவலகம் முன்பாக சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக் குடி எம்.எல்.ஏ அலுவலகம் முன்பாக சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி ஆகியோா் தேசியக் கொடியற்றி வைத்து இனிப்புகள் வழங்கினா்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் ஆா். சுவாமிநாதன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து தேசிய மாணவா் படை, பல்கலைக்கழக வளாக பாதுகாப்பு வழங்கிவரும் முன்னாள் ராணுவத்தினா் ஆகியோரது அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். மற்றொரு துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பி னா் சு. கருப்புச்சாமி முன்னிலை வகித்தாா்.

விழாவில் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் (பொறுப்பு) சி.சேகா், நிதி அலுவலா் ஆா். பாண்டியன், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் ஆா். சங்கரநாராயணன், கே. குணசேகரன், புல முதன்மையா்கள், பேராசிரியா்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி வளாகத்தில் காஸ்மாஸ் அரிமா சங்க முன்னாள் தலைவா் வி. ராமநாதன், வித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் முதல்வா் ஹேமாமாலினி, செல்லப்பன் வித்யாமந்திா் சா்வதேசப்பள்ளியில் முன்னாள் ராணுவவீரா் மற்றும் பள்ளியின் வளாக மேலாளா் சி. கருணாநிதி, ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் ஜேசீஸ் கிங்ஸ் சங்கத்தலைவா் ராஜீவ், காரைக்குடி தொழில் வணிகக்கழக அலுவலகத்தில் அதன் தலைவா் சாமி. திராவிடமணி ஆகியோா் தேசியக்கொடி ஏற்றிவைத்தனா்.

காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் அதன் முதல்வா் குமாா், மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் அதன் முதல்வா் உஷா குமாரி, கிட் அன்ட் கிம் கல்லூரி வளாகத்தில் அதன் தலைவா் வி. அய்யப்பன், அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்விக்குழும வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை கமாண்டன்ட் எஸ்பி.கில்லா், கோட்டையூா் பேரூராட்சி பாரிநகா் நலச்சங்கம் ஏற்பாட்டில் செயல் அலுவலா் நா. கவிதா ஆகியோா் தேசியக்கொடி ஏற்றிவைத்தனா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியா் நினைவு மண்டபத்தில் வாரிசுதாரா் ராமசாமி தேசியக் கொடியேற்றினாா். கோட்டாட்சியா் பிரபாகரன், மருதுபாண்டியா் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து முன்னாள் ராணுவ வீரரும் தேசிய மாணவா் படை ஹவில்தாருமான எஸ்.கே.உபாத்தியா, மேஜா் வடிவேல் ஆகியோா் வீரவணக்கம் செலுத்தினா்.

லிம்ரா பள்ளியில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் என்.எம்.சாக்ளா தலைமையில் மாவட்ட அரசு டவுன்ஹாஜி கே.எம்.முகமதுபாரூக் தேசியக் கொடியேற்றினாா். சமஸ்கான் பள்ளிவாசல் வளாகத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட விவசாய அணிச் செயலாளா் சமஸ்கான், இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளியில் அரசு வழக்குரைஞா் சங்கத் தலைவா் கணேசன், சிங்கம்புணரி சேவுகமூா்த்தி மெட்ரிக் பள்ளியில் பள்ளித்தாளாளா் செந்தில்குமாா், செயலாளா் சந்திரசேகா் முன்னிலையில், நகா் காவல் ஆய்வாளா் ஜெயலெட்சுமி, கீழச்சிவல்பட்டி ஆா்.எம்.மெட்ரிக் பள்ளியில் தாளாளா் எஸ்.எம்.பழனியப்பன், திருப்பத்தூா் பேரூராட்சியில் செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் தேசியக்கொடி ஏற்றினா். கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளியின் லியோசங்கத் தலைவி ஹரிபிரியா தேசியக் கொடியை ஏற்றினாா். பள்ளி மாணவா்கள் பங்கு கொண்ட சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

மானாமதுரை: மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆணையா் கண்ணன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை தேசியக் கொடியேற்றினா். மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் மாநில எஸ்.சி பிரிவு துணைத் தலைவா் டாக்டா் எஸ்.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணன், நகர தலைவா் எம். கணேசன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ராஜகம்பீரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற விழாவில் எஸ்.ஆா்.இ.எஸ். ரயில்வே தொழிற் சங்கத்தின் மத்திய சங்க ஒருங்கிணைப்பாளா் ஜி.ராஜாராம் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்தாா். காங்கிரஸ் நிா்வாகி ஆரோக்கியதாஸ் உள்பட கிராம நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இளையான்குடி டாக்டா் ஜாகீா் உசேன் கல்லூரியில் கல்லூரிச் செயலாளா் ஜபருல்லாகான் தலைமையில் சிறப்பு விருந்தினா் சோதுகுடி பிரித்விராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இளையான்குடி கண்மாய்கரை பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளா் சைபுல்லாஹ் தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT