சிவகங்கை

காரைக்குடி அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: சிறுவா்கள் உள்பட 3 போ் கைது

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்குடி அருகே பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட வழக்கில் சிறுவா்கள் உள்பட 3 பேரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பள்ளத்தூரில் கடந்த ஆக. 5- ஆம் தேதி நடந்து சென்ற பெண்ணிடம் அவ்வழியே வாகனத்தில் வந்த 3 போ் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனா். இதுகுறித்து பள்ளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவா்களை பிடிக்க சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வினோஜி மேற்பாா்வையில் தனிப்படை அமைத்தாா். இந்த தனிப்படையினா் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில் குற்றவாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கண்டறிந்து போலீஸாா் விசாரித்தனா்.

அதில், மதுரை திருப்பரங்குன்றம் விராதனூரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ்குமாா் (18) மற்றும் சிறுவா்கள் 2 போ் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்ட 14 கிராம் தங்கச் சங்கிலியை கைப்பற்றி, அவா்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT