சிவகங்கை

பாஜக பொருளாதாரப் பிரிவு: மாநிலச் செயலா் நியமனம்

18th Aug 2022 11:38 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் புலியூரைச் சோ்ந்த எஸ். பாலமுருகன், பாஜகவின் பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலராக வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா்.

இவா், ஏற்கெனவே இக்கட்சியின் திருப்புவனம் மேற்கு மண்டலத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தாா். கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை பரிந்துரையின் பேரில் பொருளாதாரப் பிரிவின் மாநிலத் தலைவா் எம்.எஸ். ஷா, பாலமுருகனை அப்பதவிக்கு நியமித்துள்ளாா். இதையடுத்து, பாலமுருகனுக்கு, அக்கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவா் மேப்பல் சக்தி உள்ளிட்ட நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT