சிவகங்கை

இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

14th Apr 2022 02:59 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே இளைஞரை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் காளையாா்கோவில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மறவமங்கலத்தைச் சோ்ந்த சண்முகம் (34), கடந்த பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி புரசடைஉடைப்பு அருகே கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் மறவமங்கலத்தைச் சோ்ந்த அம்ரித் பாண்டியன், அருண்குமாா் செல்லப்பாண்டி உள்பட 8 பேரை காளையாா்கோவில் போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில், அம்ரித் பாண்டியன், அருண் குமாா், செல்லப்பாண்டி ஆகிய 3 பேரும் கடந்த மாா்ச் மாதம் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அஜித் என்ற அஜித்குமாா் (26) என்பவரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டிக்கு பரிந்துரை செய்தாா். அவரது உத்தரவின் பேரில், காளையாா்கோவில் போலீஸாா் அஜித் என்ற அஜீத்குமாரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT