சிவகங்கை

மாரநாடு கருப்பணசாமி கோயில் களரி உற்சவ விழா

9th Apr 2022 02:40 PM

ADVERTISEMENT

மானாமதுரை வட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு களரி உற்சவ விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், மாரநாடு கருப்பணசாமி கோயில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒருநாள் இரவு பொழுது மட்டுமே நடைபெறும் இக்கோயில் களரி உற்சவத்தைக் கண்டு கருப்பணை தரிசிக்க கோயில். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பேருந்து, கார், வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்து மாரநாடு கருப்பணசாமி கோயிலில் குவிந்தனர். 

களரி விழாவின்போது மூலவர் மாரநாடு கருப்பணசாமி மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்

ADVERTISEMENT

இவர்கள் கருப்பனுக்கு பொங்கல் வைத்து படைத்தும் கருப்பனுக்கு உகந்த மலர் மாலைகளை காணிக்கையாக செலுத்தியும் கருப்பனை தரிசனம் செய்தனர். மலர்களுடன் சிறிய மின்விளக்குகளையும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலைகளும் கருப்பனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது.

திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கருப்பணசாமி கோவில் திருவிழாவில் சாமியாட்டம் காண காத்திருந்த பக்தர்கள். 

கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் கருப்பணசாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மலர் மாலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. நள்ளிரவு கோயில் முன்பு களரி பொட்டலில் சாமியாட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க- வடிவேலு பாணியில் ஒரு சம்பவம்: பிகாரில் களவுபோன பாலம்

இதில் கருப்பணசாமி உள்ளிட்ட சாமியாடிகள் கச்சை கட்டி கருபபணுக்கு உகந்த மேளததுடன் களரிப்பொட்டலைப் சுற்றி வந்து சாமியாடி அருள்வாக்கு கூறினர். கருப்பனுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய மாலைகள் களரியில் உள்ள உயரமான கம்பத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

மாரநாடு கருப்பணசாமிக்கு காணிக்கையாக கொடுக்க காத்திருந்த மின்விளக்கு அலங்கார மலர் மாலைகள்.

பொழுது விடிந்து சாமியாட்டம் முடிந்ததும் பக்தர்கள் கருப்பனுக்கு காணிக்கையாக செலுத்திய மாலைகளை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். கலரி புடிச்ச விழாவை முன்னிட்டு கருப்பன் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

மாரநாடு கருப்பணசாமி களரி உற்சவத்தில் விடிய விடிய நடந்த சாமியாட்டம்.

சனிக்கிழமை காலை கருப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் கிடா வெட்டி வேண்டுதலை நிறைவேற்றினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT