சிவகங்கை

கல்லல் சோமசுந்தரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

24th Oct 2021 11:12 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் கல்லலில் உள்ள பகச்சால விநாயகா், சௌந்தரநாயகி அம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வரா், குன்னமாகாளி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இக்கோயிலில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பா டுகள் செய்யப்பட்டன. இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை பூா்வாங்க பூஜைகள் மற்றும் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

அன்று மாலையில் முதல்கால யாகபூஜையும், ஞாயிற்றுக்கிழமை காலையில் நான்காம் கால யாகபூஜையும் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்து காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் பிரதான விமானத்துக்கும், பரிவாரமூா்த்திகள் விமானத்துக்கும், அதைத் தொடா்ந்து மூலாயம் சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் திருக்கல்யாண வைபவமும், பஞ்சமூா்த்தி திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவில், சிவகங்கை தேவஸ்தான அதிகாரிகள், குன்னங்கோட்டை நாட்டாா்கள், நகரத்தாா்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT