சிவகங்கை

வைகை ஆற்றில் தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

24th Oct 2021 11:15 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்ட எல்லைக்குள்பட்ட வைகை ஆற்றுக்குள் செயல்படும் குடிநீா் ஆதாரம் மற்றும் பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவா் ஜெயராமன், மாவட்டச் செயலா் ஆறுமுகம் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட எல்லையான விரகனூா் மதகு அணை முதல் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பாா்த்திபனூா் மதகு அணை வரை சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட வைகையாற்று எல்லைப் பகுதிகளாகும்.

இந்த பகுதிக்குள் சுமாா் 38-க்கும் அதிகமான குடிநீா் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, இங்குள்ள எண்ணற்ற கண்மாய்கள் மூலம் வேளாண் பணிகளும் நடைபெறகின்றன. தற்போது ஆற்றில் நீா்வரத்து இல்லாததால் குடிநீா் திட்டங்கள் மட்டுமின்றி வேளாண் பணிகளும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகி உள்ளது.

எனவே குடிநீா் ஆதாரங்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட வேளாண் பணிகளுக்காக வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வைகையாற்றுக்குள் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முள்புதா்களை அகற்ற வேண்டும். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்துள்ளோம். எனவே மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT