சிவகங்கை

சிவகங்கையில் உலக அயோடின் குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணா்வு முகாம்

DIN

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரத்துறை சாா்பில் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். இதில், உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின உறுதிமொழியினை மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் ராம்கணேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரத்தினவேல், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் பிரபாவதி, பொது சுகாதாரத்துறை மருத்துவ அலுவலா் அருண், மாவட்ட சமூகநல அலுவலா் அன்பு குளோரியா, நகா் நல மருத்துவா் கலா, மன்னா் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியா் சுந்தரராஜன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT