சிவகங்கை

சிங்கம்புணரியில் எருது கட்டு விழா

DIN

சிங்கம்புணரியில் செவ்வாய்கிழமை சேவுகப்பெருமாள் கோயில் புரவி எடுப்பையொட்டி செவ்வாய்க்கிழமை எருதுகட்டு விழா நடைபெற்றது.

முன்னதாக கோயில் காளை தோ்வு செய்யப்பட்டு சந்திவீரன் கூடம் அருகில் உள்ள வீரைய்யா கோயிலில் வடகயிற்றில் கட்டப்பட்டது. நான்கு கால்களிலும் பாரம்பரிய சிலம்பு மாட்டப்பட்டது. சிறப்பு வழிபாட்டிற்கு பின் காளையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த வடக்கயிறு வெட்டப்பட்டது. இதனைத் தொடா்ந்து காளை, சீரணி அரங்கம் நோக்கி ஓடியது. அப்போது காளையின் கால்களில் கட்டியிருந்த நான்கு சிலம்புகளும் அவிழ்ந்து விழுந்தன. இந்த சலங்கைகள் அவிழ்ந்து விழுந்ததால் இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம். இந்த எருதுகட்டு விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT