சிவகங்கை

காரைக்குடியில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் தவிப்பு

DIN

காரைக்குடியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் காா், பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் சிக்கி, அவற்றின் ஓட்டுநா்கள் தவித்து வருகின்றனா். இதனை போக்குவரத்து காவல்துறையினா் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம், செக்ரி, பல்வேறு கல்வி நிறுவனங்கள், முக்கிய அரசு அலுவலகங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், பிரபலமான வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிக் கிளைகள் என பலதரப்பட்ட முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன.

இதன் காரணமாகவும், தீபாவாளி பண்டிகைக் காலம் என்பதாலும், நகருக்குள் காா், இருசக்கர வாகனங்கள் அதிகம் இயக்கப்படுகின்றன. இவற்றுடன் முக்கியச்சாலைகளான செக்காலைச் சாலை, கோவிலூா் சாலை வழியாக உள்ளூா், வெளியூா் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் செல்கின்றன. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதும், ஒலி எழுப்பியவாறு ஊா்ந்து செல்வதுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், வணிக நிறுவனங்களைச்சோ்ந்தவா்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே முக்கியச்சாலைகளில் அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT