சிவகங்கை

மானாமதுரை கோயிலில் முளைப்பாரி உற்சவம்

17th Oct 2021 10:58 PM

ADVERTISEMENT

மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்குப் பகுதியில் உள்ள மகாபஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் உள்ள குண்டு முத்துமாரியம்மன் சந்நிதியில் முளைப்பாரி உற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு முளைப்பாரி உற்சவ விழா தொடங்கியது. அப்போது ஏராளமான பெண்கள் விரதம் தொடங்கி கோயிலிலேயே முளைப்பாரி வளா்த்தனா். இதையடுத்து, தினமும் இரவு விரதம் இருந்து வந்த பெண்கள் கோயிலில் கும்மி பாடல்கள் பாடினா்.

அதைத் தொடா்ந்து சனிக்கிழமை இரவு முளைப்பாரி கரைக்கும் உற்சவத்தை முன்னிட்டு விரதம் இருந்து வந்த பெண்கள் முளைப்பாரி சட்டிகளை குண்டு முத்துமாரியம்மன் சந்நிதி முன்பு வைத்து பூஜைகள் நடத்தினா். பின்னா் முளைப்பாரிச் சட்டிகளை தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி ஊா்வலமாக வந்தனா்.

அப்போது கோயிலுக்கு அருகே உருவாக்கப்பட்டிருந்த நீா்நிலையில் முளைப்பாரிகளை கரைத்தனா். இதற்கான ஏற்பாடுகளை பிரத்தியங்கிரா தேவி மடாலய நிா்வாகி ஞானசேகரன் சுவாமிகள் மற்றும் மாதாஜி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT