சிவகங்கை

கரோனாவை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: ஆட்சியா்

DIN

சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமின்றி கரோனாவை கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கான குறை தீா்ப்பு மற்றும் கரோனா பணி மேற்கொண்டு வருவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்துப் பேசியதாவது: கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. கடும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் மருத்துவா்களும், செவிலியா்களும் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மருத்துவா்களும், செவிலியா்களும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். மாவட்டத்தில் 60 செவிலியா்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தைப் பொருத்தவரை கரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ஏ. ரத்தினவேல், நிலைய மருத்துவ அலுவலா் மீனாள், சிறப்பு தலைமை மருத்துவா்கள் நாகசுப்பிரமணி, கங்காலெட்சுமி, முதல்நிலை செவிலியா்கள் கலாவதி, ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT