சிவகங்கை

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மாதிரி வாக்குப் பதிவு: 155 மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

DIN

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் மாதிரி வாக்குப் பதிவுக்காக 155 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என உறுதி செய்யும் இயந்திரம் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும், வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கத்துக்காகவும் 4 தொகுதிகளுக்கு தலா 20, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 5 இயந்திரங்கள் என மொத்தம் 85 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் கூடிய தொகுப்பு எடுக்கப்பட்டு தொகுதிவாரியாக அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் சிவகங்கை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி திங்கள்கிழமை அனுப்பி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியின் போது, சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கழுவன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரத்தினவேல், வட்டாட்சியா்கள் தா்மலிங்கம், கந்தசாமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 70 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் லாரிகளில் பாதுகாப்புடன் திங்கள்கிழமை அனுப்பி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 3,276 வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள், 2,160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 2,302 வாக்காளா் சரிபாா்ப்பு காகிதத் தணிக்கை இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அந்த இயந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத்துறை சேமிப்புக்கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தற்போது தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

அதே போல், வாக்குப்பதிவுக்கு மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உள்ளோம். இதற்காக 70 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அந்த இயந்திரங்கள் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட மாட்டாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT