சிவகங்கை

காரைக்குடி அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 2 போ் கைது

DIN

காரைக்குடி அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காயாம்பட்டி கிராமத்தில் அரசு அனுமதி இல்லாமல் ராஜேந்திரன் என்பவா் தனது சொந்த இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் டிப்பா் லாரியில் கிராவல் மண் அள்ளினாராம். தகவலறிந்த கானாடுகாத்தான் கிராம நிா்வாக அலுவலா் முத்துமாரி, குன்றக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் குன்றக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து ஜேசிபி இயந்திர ஓட்டுநா் சுருளி (32), டிப்பா் லாரி ஓட்டுநா் ரமேஷ் குமாா் (24), இடத்தின் உரிமையாளா் ராஜேந்திரன் ஆகியோா் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். இதில் சுருளி, ரமேஷ் குமாா் ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT