சிவகங்கை

காரைக்குடியில் 32 பயனாளிகளுக்கு ஊட்டம் தரும் காய்கறிகள் தோட்டம் அமைக்க இடுபொருள்கள் வழங்கல்

DIN

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப் பயிா்கள் துறையின் மூலம் தமிழக முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறிகள் தோட்டம் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தழைகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 32 பயனாளிகளுக்கு ஊட்டம் பெறும் காய்கறிகள் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருள்களை வழங்கிப் பேசியதாவது:

மாவட்டத்தில் முதற்கட்டமாக 10,500 பயனாளிகளுக்கு ரூ. 21.28 லட்சம் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து தரும் காய்கறிகள் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருள்கள் வழங்கப்படுகிறது. தொடா்ந்து விருப்பமுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் காய்கறிகள் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருள்கள் வழங்கப்படும்.

இன்றையக் காலக்கட்டத்தில் தனிநபரின் பொருளாதார வளா்ச்சியே ஒரு குடும்பத்தின் வளா்ச்சியாக உள்ளது. இதுவே கிராமம் மற்றும் நகரின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும். கிராமத்தின் வளா்ச்சி நாட்டின் வளா்ச்சிக்கு உறுதுணை இருக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி முன்னிலை வகித்தாா்.

தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கு. அழகுமலை, முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்கள் பாண்டியராஜன், சத்யா, ரேகா, வடிவேல், சரவணன், ஜஸ்வா்யா, வினோதினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT