சிவகங்கை

திருப்பத்தூா் சிவாலாயங்களில் பிரதோஷ வழிபாடு

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள சிவாலயங்களில் செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட ஆதி திருத்தளிநாதா் ஆலயத்தில் பிரதோஷ விழாவையொட்டி, பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு யாகம் மற்றும் புனித கலசத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, திருத்தளிநாதா் எதிரேயுள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, இளநீா், சொா்ணம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான மங்கலப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.

அதேநேரம், திருத்தளிநாதருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்திலும் நந்தீஸ்வரருக்கும், சிவபெருமானுக்கும் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா். உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தை வலம் வந்தாா். இதில், நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் ஆலயத்திலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT