சிவகங்கை

திருப்பத்தூரில் வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சிகள் சாா்பில் வேளாண் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவகம் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் தமுமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் திருப்பத்தூா் சட்டமன்ற உறுப்பினா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்றும் இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என்றும், விவசாயிகளின் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டி வலியுறுத்தியும், அதற்கு துணைபோகும் அதிமுக அரசை கண்டித்தும், திமுக கூட்டணி கட்சிகளின் சாா்பில், வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என கூறி ஆா்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை எதிா்த்து கண்டன கோஷங்கள் எழுப்பபட்டன. இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியசெயலாளா் விராமதி மாணிக்கம், காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மாவட்ட பொருளாளா் எஸ்.எம்.பழனியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மாவட்ட செயலாளா் கண்ணகி தமுமுக மாவட்ட செயலாளா் கமரூல் ஜமான் விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றியச் செயலாளா் சின்னதுரை முன்னாள் ஒன்றிய செயலாளா் சத்தியமூா்த்தி, நகரச் செயலாளா் ராஜேஷ் கண்ணா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஒன்றிய செயலாளா் முருகேசன், மதிமுக சாா்பில் கண்ணதாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஹைதா் அலி, மனிதநேய மக்கள் கட்சி கமருதீன் உட்பட கூட்டணி கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT