சிவகங்கை

திருப்புவனம், இளையான்குடியில் பெரியார் பிறந்த நாள் விழா

17th Sep 2020 02:01 PM

ADVERTISEMENT

திருப்புவனம், இளையான்குடியில் வியாழக்கிழமை பெரியாரின் 142 வது பிறந்த நாள் விழா திமுகவினர் சார்பில் கொண்டாடப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் திமுகவினர் அதன் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் பெரியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 

ஒன்றியச் செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி, மீனவரணி அமைப்பாளர் அண்ணாமலை, மாவட்ட பிரதிநிகள் ராமலிங்கம், ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

இளையான்குடியில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுப.மதியரசன் தலைமையில் திமுக வினர் பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு நாசர், மாவட்டட பிரதிநிதிகள் தெளலத், இப்ராகீம், யாசின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

Tags : Sivagangai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT