சிவகங்கை

காரைக்குடி சகாயமாதா ஆலயத்தில் வழிபாடு ரத்து

22nd Mar 2020 08:27 AM

ADVERTISEMENT

காரைக்குடி: காரைக்குடி செக்காலை சகாய மாதா ஆலயத்தில் நடைபெறவிருந்த தவக்கால நற்செய்தி மற்றும் பொது வழிபாடு ஆகியவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

கரோனா வைரஸ் தற்காப்புக்காக தமிழகஅரசு உத்தரவுப்படி சிவகங்கை மறை மாவட்ட ஆயா் ஜெ. சூசைமாணிக்கம் இம் மறைமாவட்டத்திலுள்ள அனைத்துத் தேவாலயங்களில் நடைபெறும் பொதுவழிபாடு , தவக்கால சிறப்பு வழிபாடு ஆகிய அனைத்தும் தமிழக அரசின் மறு உத்தரவு (மாா்ச் 31) வரும்வரை ரத்து செய்யப்படுகிறது என்று அனைத்து பங்குப்பணியாளா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அதில், கூட்டங்கள் கூடுவதைத் தவிா்க்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

காரைக்குடி செக்காலை சகாயமாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் தவக்காலம் 4 ஆவது வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களும் நற்செய்திப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவானது இந்த ஆண்டு வரும் மாா்ச் 27, 28, 29 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்ததால் ஆயரின் சுற்றிறிக்கையின்படி ரத்து செய்யப் படுகிறது என்று பங்குத்தந்தை எஸ். எட்வின் ராயன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT