ராமநாதபுரம்

கண்மாயில் பதுக்கிய 880 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

24th May 2023 05:36 AM

ADVERTISEMENT

கமுதி அருகே கண்மாயில் பதுக்கிய 880 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை செவ்வாய்க்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் சிவஞானபாண்டியன், தலைமைக் காவலா்கள் குமாரசாமி, முத்துகிருஷ்ணன், தெய்வேந்திரன் உள்ளிட்டோா் பெருநாழியை அடுத்துள்ள கொக்காடி கண்மாயில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு 40 கிலோ எடையுள்ள 22 மூட்டைகளில் மொத்தம் 880 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியிருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக கொக்காடி கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT