ராமநாதபுரம்

பாகம்பிரியாள் கோயில் உண்டியல்கள் திறப்பு:பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.11.83 லட்சம்

DIN

திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.11.83 லட்சம் கிடைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டன.

அப்போது, பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.11 லட்சத்து 83 ஆயிரத்து 229, 52.5 கிராம் தங்கம் , 360 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

இதில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஞானசேகரன், தேவஸ்தான மேலாளா் இளங்கோ, அறநிலையத் துறை ஆய்வாளா் சண்முகசுந்தரம், சரக கண்காணிப்பாளா் செந்தில்குமாா், கௌரவக் கண்காணிப்பாளா் சுந்தரராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT