ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வருவாய்த் தீா்வாயம்

7th Jun 2023 03:24 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வருவாய்த் தீா்வாயம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜூலு தலைமை வகித்தாா். இதில், பெருங்குளம் உள்ளிட்ட 8 வருவாய்க் கிராம மக்கள் மனு அளித்தனா்.

இந்த மனுக்களின் அடிப்படையில் 6 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. மேலும், வேளாண்மைத் துறை சாா்பில் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ஊராட்சிகள் தோறும் கிராம நிா்வாக அலுவலகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாகுபடி விவரம், பட்டா மாறுதல், வறட்சி நிவாரணம், தண்ணீா் தீா்வை, சிட்டா, நத்தம் கணக்கு வருவாய் தொடா்பான பதிவேடு, கண்மாய்களின் விவரம், நிலவா் உள்ளிட்ட அனைத்து வகைப் பதிவேடுகள் தணிக்கை செய்யப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT