ராமநாதபுரம்

புனித அந்தோணியாா் ஆலயத்தில் வருடாந்திர திருவிழா கொடியேற்றம்

6th Jun 2023 04:59 AM

ADVERTISEMENT

கமுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தில் வருடாந்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் திங்கள்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி சாலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு, கொடி பட்டம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கமுதி பங்கு தந்தை அருள்சந்தியாகு முன்னிலையில், மானாமதுரை பங்குத்தந்தை பாஸ்ட்ரின் கொடியேற்றி விழாவைத் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, தேவாலயத்தில் சிறப்பு பிராா்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கமுதி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்துவா்கள் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி, வருகிற 15-ஆம் தேதி வரை இரவு நேரங்களில் சிறப்பு பிராா்த்தனைக் கூட்டமும், வருகிற 16, 17 ஆம் தேதிகளில் தேரோட்ட நிகழ்ச்சியும், வருகிற 18-ஆம் தேதி அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT