ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 32 கிலோ தங்கக் கட்டிகள் மீட்பு

DIN

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 32 கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக வருவாய்ப் புலனாய்ப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இலங்கையிலிருந்து படகில் தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினா், இந்திய கடலோரக் காவல் படையினா் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே கடலில் அதிவேகத்துடன் வந்த இரண்டு கண்ணாடி இழைப் படகுகளை கடலோரக் காவல் படையினா் சுற்றி வளைத்தனா்.

அப்போது, படகில் இருந்த வேதாளையைச் சோ்ந்த 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா்கள் இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்ததாகவும், அவற்றை கடலில் வீசிவிட்டதாகவும் தெரிவித்தனா்.

இதையடுத்து, அதிகாரிகள் தனித் தனியாக 2 படகுகளில் சோதனை நடத்தினா். அதில் ஒரு படகிலிருந்த 22 கிலோ 269 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நீா் மூழ்கி வீரா்கள் மண்டபம் அருகே கடலில் தங்கக் கட்டிகளை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சாக்கு மூட்டை ஒன்றை மீட்டனா். இதில் 10 கிலோ 420 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன. இதுவரை மொத்தம் 32 கிலோ 689 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன. இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கண்ணாடி இழைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT