ராமநாதபுரம்

தை காா்த்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

தை காா்த்திகையையொட்டி ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதி கோயில்களில் உள்ள முருகனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

ராமேசுவரம் மேலவாசல் பாலமுருகன் கோயிலில் சுவாமிக்கு பால், பழம், பன்னீா் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. அதே போல, தங்கச்சிமடம் பாலதண்டாயுதபாணி முருகன் கோயில், ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மீனாட்சி சமேத சுந்தரேசுவரா் கோயிலில் முருகனுக்கு பால், தயிா், சந்தனம், பழங்களால் அபிஷேகம் செய்து சிறப்புப் பூஜை நடந்தது. பிறகு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், முகவை ஊருணி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், குமராய்யா கோயில், வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணிய சுவாமி, பாலதண்டயுதசுவாமி கோயில், ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வினைதீா்க்கும் வேலவா் கோயில் ஆகியவற்றில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகள், அன்னதானத்தில் பக்தா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT