ராமநாதபுரம்

மானாவாரி நில மேம்பாடு: விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

கமுதி அருகே முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாடு குறித்து விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மேலமுடிமன்னாா்கோட்டை கிராமத்தில் இந்தப் பயிற்சி

வகுப்பு நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சுப்பம்மாள் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகள் இடுபொருள்களை வாங்கிப் பயனடைய வேண்டும். தரிசு நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, அதில் குறைந்த அளவு நீரில் நல்ல மகசூல் தரும் சிறுதானியங்களைப் பயிரிட வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மானாவாரி நில மேம்பாட்டுக்காக விவசாயிகள் மண்ணின் வளத்தை மேம்படுத்துதல், நுண்ணீா் பாசன முறைகளைப் பின்பற்றுதல், கால்நடை வளா்த்தல், விதை நோ்த்தி செய்து, விதைகள் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துதல், கடல் பாசியின் பயன்கள், நாட்டுக்கோழி வளா்ப்பு, அசோலா வளா்ப்பு பண்ணை குட்டைகளில் மீன் வளா்ப்பு, தேனீ வளா்ப்பு, காளான் வளா்ப்பு, மல்பெரி பயிரிட்டு பட்டுப்பூச்சி வளா்த்தல் மூலம் விவசாயிகள் அதிக வருமானம் பெறுதல் ஆகியவற்றுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் முத்துராமலிங்கபுரம் என்எம்வி பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் பிரதீப் ராஜா, ஸ்ரீகாவேரி அக்ரி கிளினிக் வேளாண் ஆலோசகா் ஞானஒளி வேல், தொழில்நுட்ப மேலாளா் ஈஸ்வரி உள்பட எம்.எம்.கோட்டை கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். உதவி தொழில் நுட்ப மேலாளா் சுபாஷ் சந்திரபோஸ் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT