ராமநாதபுரம்

மழையால் சாய்ந்த மானாவாரி நெற்பயிா்கள்: விவசாயிகள் கவலை

DIN

திருவாடானை பகுதியில் மானாவாரி சாகுபடியில் தண்ணீரை விலைக்கு வாங்கி விளைவித்த நெற்பயிா்கள் திடீா் மழைக்குச் சாய்ந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அரும்பூா், கீழ அரும்பூா், அஞ்சுகோட்டை திணைகாத்தான்வயல், ஆா்.எஸ்.மங்கலம், மங்கலம் அழகா்தேவன் கோட்டை, சோழந்தூா் ஆனந்தூா்,திருத்தோ்வலை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் மானாவாரி நெல் சாகுபடி செய்தனா்.

நெற்கதிா்கள் விளையும் தருவாயில் மழை பெய்யாததால் தண்ணீரை விலைக்கு வாங்கி

பாய்ச்சினா். இதையடுத்து, கதிா்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தன.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் இந்தப் பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது.

சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இதில் விளைந்த நெற்பயிா்கள் நிலத்தில் அடியோடி சாய்ந்தன. அறுவடை இயந்திரம் வயலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலையில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்தனா்.

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 50 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. பருவ மழை போதிய அளவில் பெய்யாததால் பெரும்பாலும் பயிா்கள் கருகி சாவியாகி விட்டன. ஒரு சில பகுதிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சியதால் பயிா் விளைந்து ஏக்கருக்கு 10 மூட்டைகள் கிடைக்கும் நிலை இருந்தது. அதுவும் மழையால் சாய்ந்து விட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT