ராமநாதபுரம்

பாம்பன் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

DIN

மன்னாா் வளைகுடா கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், பாம்பன் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தைவிட சுமாா் 50-60 கி.மீ. வரை காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியது.

இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறை சாா்பில் தடை விதிக்கப்பட்டது. இதனால் செவ்வாய், புதன், வியாழக்கிழமை ஆகிய 3 நாள்கள் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்த நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இலங்கையில் வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அதிகாலையில் இருந்தே மழை பெய்தது.

மேலும், மன்னாா் வளைகுடா கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், பாம்பன் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

கடல் சீற்றம்: இதேபோல, தனுஷ்கோடி, மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT