ராமநாதபுரம்

கடலில் சூறைக்காற்று: மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

DIN

வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 ஆயிரம் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும், இதனால், மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தனுஷ்கோடி, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, வாலிநோக்கம், தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 25 ஆயிரம் மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

அந்தந்தப் பகுதி மீனவா்கள் தங்களது விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை பாதுகாப்புடன் நிறுத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT