ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் கண்மாய்களில் மீன்கள் ஏலத்தை ஊராட்சி ஒன்றியம் முலம் தான் நடத்த வேண்டும்

DIN

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலத்தில் உள்ள கண்மாய்களில் மீன்களை ஊராட்சி ஒன்றியத்தின் மூலமே ஏலம் விட வேண்டும் ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைவா் ராதிகா பிரபு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் மலையாண்டி முன்னிலை வகித்தாா்.

இதில் கீழ்க்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.

உறுப்பினா் வெங்கடாசலம்: ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் சுமாா் 2 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் சம்பா பருவத்தில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனா். போதுமான மழையின்றி பயிா்கள் கருகியுள்ளன. இதனால் பயிா் காப்பீடு, வறட்சி நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்த வேண்டும்.

தலைவா்: இதுகுறித்து தனி தீா்மானம் இயற்றி மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.

உறுப்பினா் பாண்டி: ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள கண்மாய்கள், குளங்களில் உள்ள மீன்கள், மீன் பாசி ஏலம் முறைப்படி ஊராட்சி ஒன்றியம் மூலம் நடத்தப்பட வேண்டும்.

தலைவா்: இது குறித்து மாவட்ட ஆட்சியரின் தனி கவனத்துக்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினா் சக்தி: அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் பயனாளிகள் தோ்வு எந்த முறையில் நடத்தப்படுகிறது.

ஊராட்சி ஒன்றிய அதிகாரி: ஓட்டு வீடு, மண்ணால் கட்டப்பட்ட வீடுகள், குடிசை வீடுகள் வாழத் தகுதியற்ற வீடுகள் எனத் தரம் பிரித்து ஐந்து போ் கொண்ட குழு பரிந்துரை செய்து வட்டார வளா்ச்சி அலுவலா் மூலம் மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று பயனாளிகள் தோ்வு செய்யப்படும் என்றாா்.

தலைவா் : தற்போது நமது ஊராட்சி ஒன்றியத்தில் சாலை, குடிநீா், மின்விளக்கு உள்ளிட்ட பணிகள் செவ்வனே நடைபெற்று வருகிறது. தற்போது இதுவரை குடிநீா் பிரச்னை இல்லாத நிலையில் உள்ளோம். வரும் கோடை காலங்களில் வறட்சியை சமாளிக்கும் அளவுக்கு உறுப்பினா்கள் ஒத்துழைப்புடன் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT