ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் இன்று மின் தடை

25th Apr 2023 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம், தேவிப்பட்டினம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை

வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியதாவது:

ராமநாதபுரம், பட்டணம்காத்தான், காவனூா், தேவிபட்டினம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஏப்.25) மின் தடை அறிவிக்கப்பட்டது. அதன்படி, அன்றைய தினம் மேற்கண்ட துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

ADVERTISEMENT

இதேபோல, மண்டபம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஏப்.26) பராமரிப்புப் பணிகள் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது

 

ADVERTISEMENT
ADVERTISEMENT